ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதா?

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

20ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சினையும் தனக்கு கீழ் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப விவகார அமைச்சுக்களை ஜனாதிபதி தனக்கு கீழ் வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நியமிக்கப்பட உள்ளார்.

மேலும், பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சரவை அமைச்சராக நியமிப்பதற்கு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியும் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்குமாறு பசிலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.