அலரி மாளிகை குறித்து வெளியான செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக முன்னதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த செய்திகளில் உண்மையில்லை எனவும் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அலரி மாளிகையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.