பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Report Print Yathu in அரசியல்
38Shares

கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபையின் 2021 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச சபையின் அமர்வு இன்று சபையின் தவிசாளர் அருணாச்சலம் ஐயம்பிள்ளை தலைமையில் ஆரம்பமானது.

​ 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையின் தவிசாளர் முன்வைத்து உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செயலாளரினால் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.​ 20 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையில் 12 பேர் ஆதரவாகவும், 7 பேர் எதிராகவும், ஒருவர்​ நடுநிலைமையாகவும் வாக்களித்தனர்.

கூட்டமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக சுகந்திரக்கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஈழமக்கள் ஐனநாயக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும்,​ சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர். நடுநிலையாக சுகந்திரக்கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் வாக்களித்தார்.

பிரதேச சபையின் உறுப்பினர் விபரம்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -11

ஐக்கிய தேசியக்கட்சி​ ​ ​ -02

சுகந்திரக்கட்சி​ ​ ​ ​ -02

சுயேட்சைக்குழு -04

ஈழமக்கள் ஐனநாயக்கட்சி -01