சஜித் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு இடையில் சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்
179Shares

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

உலக பேரனர்த்தமாக மாறி வரும் கொவிட் நோய்த் தொற்று தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்பன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டு வரும் அனர்த்தங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.