ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய - இலங்கை உறவு புதிய பகுதிகளாக விரிவடைந்து கடந்த ஒரு வருடத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்பு உறவுகளை குறிக்கிறது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நோய்களுக்கும், இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்குமான இலங்கையின் போராட்டத்தை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்க்கமான தலைமையின் கீழ் இருதரப்பு உறவின் முழு திறனும் உணரப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.