அரசாங்கத்தின் சிலரது தேவைக்கு ஏற்ற வகையில் நீதிமன்றங்கள் செயற்படுகின்றன! நலின் பண்டார

Report Print Kamel Kamel in அரசியல்
84Shares

அரசாங்கத்தின் சிலரது தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீதிமன்றங்கள் செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் நோய்த் தொற்று காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் முக்கிய பிரபுக்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொதுமக்களது வழக்குகள் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய பிரமுகர்களின் வழக்குகளை விசாரணை செய்தல், வழக்குகளை தள்ளுபடி செய்தல் மற்றும் பிணை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது கேள்விக்குறியே என அவர் தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஓர் குறிப்பிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பிற்கு தேவையான வகையில் நீதிமன்றங்கள் செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.