தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்திய போது தமிழ் அரசியல்வாதிகள் எங்கிருந்தார்கள் என ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் அல்லலுற்ற போது நீங்கள் எங்கிருந்தீர்கள், நாங்கள் யுத்த முன்னரங்களில் இருந்து மக்களை காப்பற்றினோம்.
போரில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூர்வது பிரிவிணைவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிகரானது.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகளை போர் இடம்பெற்ற காலத்தில் காண முடியவில்லை.
அனைவரும் கொழும்பில் சொகுசான வீடுகளில் கட்டிலுக்கு கீழே இருந்தார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது பிரபாகரன் தப்பிச் செல்லும் தமிழ் மக்களை கொலை செய்த போது இந்த தமிழ் அரசியல்வாதிகள் எங்கிருந்தார்கள் என சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.