ரிசாட் பதியூதீனின் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும்! எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

Report Print Dias Dias in அரசியல்
813Shares

அநியாயமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிசாட் பதியூதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டமை உண்மைக்கும், சமூகத்தின் பிரார்த்தனைகளும் கிடைத்த வெற்றியாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கடந்த செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அமீர் அலி விடுத்துள்ள செய்தியில்,

மக்களுக்காகவும் மக்களின் உரிமைக்கும் போராடிய, சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் குரலாக நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஓங்கி ஒலித்த ரிசாட் பதியூதீனை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து அடைத்தமை மனுநீதிக்கு முரணான செயலாகும்.

கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றம் வர அனுமதி வழங்கப்படும் நிலையில், எந்தவித குற்றமும் செய்யாத அநியாயமான முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு புலிப்பாயங்கரவாதிகளால் துரத்துயடிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைமைக்கு கிடைத்த பரிசு சிறை வாழ்க்கையாகும்.

எப்போது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு செய்யப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தினதும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினதும் ஆதரவினைப் பெற்ற ரிசாட் பதியூதீனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை உண்மைக்கும், சமூகத்தின் பிரார்த்தனைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த பிணை மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி சட்டத்தரணிகளான அணில் சில்வா, கே.வி.தவராசா, அனோஜா பிரேமரேட்ன ஆகியோயோர் ரிசாத் பதியுதீன் சார்பான பிணை மனுவை ஆதரித்துவாதிட்டனர்.

அரச தரப்பு சார்பில் பிரதி மன்றாடியார் திலீப பீரிஸ் பிணை மனுவை நிராகரிக்கும் படி ஆட்சேபனை தெரிவித்து கடுமையான வாதத்தை முன்வைத்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா உலகம் முழுவதிலும் கொரோனா காரணமாக பிணை வழங்கப்பட்ட பல வழக்கின் தீர்ப்புகளை மன்றிற்கு சமர்ப்பித்ததுடன் இலங்கை சிறையில் 840 பேருக்கு கொரோனா பரவியதையும் தண்டனை வழங்கப்பட்ட கைதி இறந்ததையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

you may like this video