ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்வைத்த யோசனையை நிராகரித்த ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்
278Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய அகில விராஜ் காரியவசம், பல காலமாக எதிர்பார்த்திருந்த, அந்த கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைப்பதிலும் தடையேற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு சிரேஷ்ட உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள ரணில் விக்ரமசிங்க, இளைஞர் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை நியமிக்குமாறு யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே அகில விராஜ் காரியவசத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வதில் தடையாக அமைந்துள்ளதாக தெரியவருகிறது.