மக்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தாத அபிவிருத்தியில் பயனில்லை என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிக சிறிய அளவிலான சதவீதமே சுகாதாரத்துறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீதி அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரத்தை புறந்தள்ளி அரசாங்கம் செய்யும் பாதை அபிவிருத்தியை தரகு அபிவிருத்தி என்றே குறிப்பிட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் மீது கரிசனை கொண்டிருந்தால் சுகாதாரத்துறைக்கே கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கம் எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்தது என்பதுடன் தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஒப்பீடு செய்தால் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.