ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ்,முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்:இம்ரான்

Report Print Mubarak in அரசியல்
127Shares

ஜனாஸா விடயத்தைப் பயன்படுத்தி தமிழ்,முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை நடைமுறைப்படுத்துகின்ற அரசு ஏன் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மட்டும் அவர்களின் வழிகாட்டல்களைப், பின்பற்றாமல் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி எரிக்க வேண்டும் எனக் கூறும் அரசு ஏன் மினுவான்கொடையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன், நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கூறியபோது அதைக் கேட்கவில்லை.

இன்று ஜனாசா விடயத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை அடக்க அனுமதி தாருங்கள் என்றே கோருகின்றார்களே தவிர அதை மன்னாரிலா, யாழ்ப்பாணத்திலா, ஹம்பாந்தோட்டையிலா என்று கேட்கவில்லை.

இதை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உள்ள புரிந்துணர்வைக் குழப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.