இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இணைய வழியில் அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடாத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும், அமைச்சர்கள் தங்களது காரியாலயங்களிலிருந்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று காரணமாக மட்டுமன்றி செயற்திறன் மற்றும் செலவை குறைப்பதற்கும் இவ்வாறான கூட்டங்கள் உதவும் என இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறு நவீன தொழில்நுட்பங்கள் ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.