கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அமைச்சு நியமனம்!

Report Print Kamel Kamel in அரசியல்
212Shares

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய அமைச்சு ஒன்றை நியமித்துள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பு, அடிப்படை சுகாதார சேவைகள் மற்றும் தொற்று நோயியல் தொடர்பிலான இராஜாங்க அமைச்சராக டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டிருந்தார்.

மஹர சிறைச்சாலையில் பாரிய வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் இந்த புதிய இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.