நாடாளுமன்றத்திற்கு வருமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அழைத்துள்ளனர் - பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நேற்றைய தினம் கொழும்பில் உள்ள பௌத்த விகாரைகள் சிலவற்றுக்கு சென்று ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பசில், தன்னை நாடாளுமன்றத்திற்கு வருமாறு ஜனாதிபதியும், பிரதமரும் அழைத்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்திற்கு செல்வதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் நாடாளுமன்றத்திற்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்திற்கு வரும் தேவை ஏற்பட்டால், நாடாளுமன்றத்திற்கு வர நேரிடும். ஆனால் இன்னும் அப்படியான நிலைமை ஏற்படவில்லை என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.