மஹர சிறைச்சாலையின் பதிவேடு காணாமல் போயுள்ளது! எஸ்.எம்.மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்
89Shares

மஹர சிறைச்சாலையின் பதிவேடு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிரிழந்த சில கைதிகள் கொரோனா தொற்றாளர்கள் எனக் கூறி தகனம் செய்யும் தயார் நிலைகள் இருக்கின்றது.

எனவே இறந்த கைதிகளின் மரண பரிசோதனைகளை சரியாக நடத்தி அவற்றை அடக்கம் செய்ய வேண்டும்.

உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்து, சம்பவத்தை மூடி மறைக்க தயாராகி வருகின்றனர்.

இப்படியான சம்பவங்கள் எப்படி நடக்க முடியும் எனவும் மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.