கிழக்கு ஆளுநருக்கும் ஆப்கானிஸ்தான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Abdulsalam Yaseem in அரசியல்
48Shares

இலங்கைக்கான ஆப்கனிஸ்தான் நாட்டின் தூதுவர் அஷ்ரப் எம் ஹைதரிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது ஆப்கனிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கில் முன்னெடுக்கப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வருவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தூதுவர்,

கிழக்கில் முன்னெசுக்கப்படும் வியாபார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்தும் விசேடமாக இலங்கை அரசினால் யுத்தத்திற்கு பின்னராக முன்னெடுக்கப்படும் சமாதான மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் ஆப்கான் நாட்டில் தற்போது நிலவி வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழித்து சமாதானத்தை கட்டியெழுப்ப இலங்கை அரசினால் வழங்கப்படக்கூடிய ஆலோசனைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.