உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது! அமைச்சர் நாமல்

Report Print Murali Murali in அரசியல்
79Shares

“கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்கி, இன்று நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்குமாறு எங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவை அமைத்து அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டார்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எனக்கு எதிராகவும் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடுத்தார்கள். அரசியல் எதிரிகளைப் பழிதீர்க்கவே பொலிஸாரை பயன்படுத்திவந்தார்கள்.

கடந்த அரசாங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவை செயலிழக்கச்செய்திருக்காவிட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுத்திருக்கலாம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. நாங்கள் விசாரணைகளை மறைக்கவில்லை. இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் சட்டத்துக்கு முன்நிறுத்துவோம்.

அரசியல்வாதிகளை இந்த விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம்.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெறுகின்றது.

காசோலைகளைக் கைமாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் நிலைநாட்டப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.