யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக மகிந்தவிற்கு நன்றி! பதிலளிக்காமல் அழைப்பை துண்டித்த சம்பந்தன்

Report Print Sujitha Sri in அரசியல்
1190Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் ஆரம்பித்திருந்தார் என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது? எங்கே பயணிக்கிறது? தமிழ் மக்களை எங்கே கூட்டிக்கொண்டு போகிறது? இவை தான் முக்கியம் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து “யுத்தம் முடிந்த பிறகு நாடாளுமன்ற உரையொன்றை ஆற்றும் போது நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள், போரை முடிவிற்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி என. இது தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்தாக நீங்கள் சிந்திக்கவில்லையா?” என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்காமல் அவர் தொலைபேசி அழைப்பினை துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.