தகனம் செய்வதை எதிர்த்தே சடலங்களை பொறுப்பேற்கவில்லை! ரவூப் ஹக்கீம்

Report Print Steephen Steephen in அரசியல்
120Shares

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை ஏற்காது வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் பெரும்பாபாலான சடலங்கள் முஸ்லிம் இனத்தவர்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே முஸ்லிம்கள் சடலங்களை பொறுப்பேற்கவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள அநீதியான முடிவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.