சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கோருமளவிற்கு வந்துவிட்டன! வீ.ஆனந்தசங்கரி

Report Print Yathu in அரசியல்
59Shares

சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கோருமளவிற்கு தமிழ் தலைமைகள் வந்துவிட்டதாக கேட்பது வேடிக்கையான விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இப்போது இருக்கின்ற தமிழ் தலைமைகள் எவ்விதமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.

காலங்களிலும் இவர்கள் அதை எடுக்கப்போவதில்லை. சமஸ்டி தீர்வைக்கூட காலம் காலமாக எதிர்த்தவர்கள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையான விடயமாகும்.

தமிழ் மக்களிற்கான பிரச்சினை தீர்வாக 1949ஆம் ஆண்டிலேயே சமஸ்டி பற்றி பேசப்பட்டது. காலப்போக்கில் சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தலைவர்களும், சிங்கள மக்களும் இணங்கியிருந்தார்கள்.

குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார். ஆனால் தமிழ் தலைமைகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

ரணில் விக்ரமசிங்க ஒரு லட்சம் வாக்குகளால் தோல்வியடைந்தார். அப்போது சமஸ்டி கிடைத்திருந்தால் இன்று 10 ஆண்டுகளிற்கு மேல் சமஸ்டி தீர்வு கிடைத்திருக்கும்.

அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத எமது தலைமைகள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என்பது வேடிக்கையான விடயம்.

இன்றைய சூழலில் ஓர் சுமூகமான சூழ்நிலையை உருவாக்க தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. கூட்டாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை பதவி ஆசைக்காக உடைத்து சென்றனர்.

2004ஆம் ஆண்டில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர்.

அந்த காலப்பகுதியில் தான் தமிழ் மக்களிற்கு எதிரான ஓர் அனர்த்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை அடிமையாக்கியிருக்கின்றார்கள். இதற்கான முழு பொறுப்பாளிகளும் மாவை மற்றும் சம்பந்தனே.

சகல உரிமைகளும் பறி்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் தேர்தல் இடம்பெற்றது. ஒற்றுமையாக செயற்பட்ட கட்சியை இப்போதுள்ள அரசியல் கட்சியின் சம்பந்தன் மாவை ஆகியோர் உடைத்தார்கள்.

எனக்கும் அப்போது அச்சுறுத்தல்கள் மத்தியிலும், துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக நான் இந்த கட்சியை வளர்த்துள்ளேன்.

இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை இல்லாது செய்ததன் விளைவாக தமிழ் மக்கள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்துள்ளனர்.

என்னுடைய அரசியல் வரலாற்றில் விடுதலைப்புலிகக்களை அழிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் கொத்து கொத்தாக தமிழர்களை கொலை செய்த சரத் பொன்சேகாவிற்கு மாவை, சம்பந்தன் ஆகியோர் ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

2004ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளின் பங்களிப்புடன் வென்றார்களேயன்றி அவர்கள் தாங்களாக வெல்லவில்லை.

இறந்தவர்களிற்கு அங்சலி செலுத்தும் வகையில் மாவீரர்நாள் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் அதை தமது பதவிக்காகவே அங்சலி தொடர்பில் பேசினார்களேயன்றி உண்மையான உணர்வோடு அஞ்சலி செலுத்த அவர்கள் விரும்பவில்லை.

இன்று சகலதையும் துறந்து 60 வருட அரசியல் அனுபவத்தோடு 87 வயது வரை நான் இந்த கட்சியில் இருந்து வருகிறேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது எனது கட்சி அல்ல. இந்த கட்சியை வளர்ப்பதில் பாடுபட்டவன் நான். தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, மலையக கட்சி இவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதே இந்த கூட்டணி.

இந்த சரியான பாதையில் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் ஊடாக தமிழ் மக்களிற்கு ஓர் பிரதிநிதித்துவம் இருந்தது.

இந்த கட்சியை மாவை, சம்பந்தன் இருவருமே உடைத்தார்கள். தமிழரின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்தார்கள்.

இப்போது சிங்கள தலைமைகள் தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்தால் போதாதா என்று பேசும் அளவிற்கு தமிழ்த் தலைமைகள் தமிழர்களை கொண்டுவந்து தெருவிலே விட்டுள்ளார்கள்.

மேலும் இலங்கையின் வரவு செலவு திட்டத்திலே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்து வருவதென்பது இன்று, நேற்றல்ல இது தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்ற விடயம்.

வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதே இதற்கு காரணமாகின்றது.

மறைமுகமாக அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்றும் நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் நினைத்திருந்தால் தமழ் மக்கள் பற்றி சிங்கள தலைமைகள் இழிவாக பேசுகின்றமை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து திர்த்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அதனை அதனை அவர்கள் செய்திருக்கவில்லை.

எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்காது விட்டதன் பிரதிபலன்களையும், நன்மைகளையும் அவர்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.