கொரோனா வைரஸ் தற்போது கொத்தணிகளுக்குள் மாத்திரமின்றி சமூகம் முழுவதும் பரவி வருவதாக இலங்கையில் உள்ள பிரதான வைரஸ் தொடர்பான நிபுணரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் என்பதால், அதனை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் இலங்கையில் சமூகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள சிலர் விரும்பவில்லை. எனினும் உண்மையை எதிர்கொண்டு, அதனை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 80 வீதமானவர்களுக்கு எந்த நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை என்பது உறுதியாகி இருப்பதாகவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.