சஜித் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி

Report Print Steephen Steephen in அரசியல்
495Shares

எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான இந்த கூட்டணியில் தவிசாளர், மூன்று உப தவிசாளர்கள், பொதுச் செயலாளர், மூன்று உப பொதுச் செயலாளர் உட்பட நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி என்பன புதிய கூட்டணியிலும் இணையவுள்ளன.

ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இந்த புதிய கூட்டணிக்காக புதிய யாப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பதவி மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகிய பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் புதிய கூட்டணியில் உறுப்பினர்களாக இணையவுள்ளனர்.

புதிய கூட்டணியின் தவிசாளர் பதவிக்கு இதுவரை எவருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. உப தவிசாளர்களாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.