கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்
143Shares

நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக, துறைமுகங்கள் மற்றும் வானூர்தி தளங்கள் போன்ற அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறக்குத்துறையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஜே.வி.பி.யின் அரசியல்பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த அரசாங்கம் அதிக கடன்களைப் பெற வேண்டும். எனினும் சர்வதேச கடன் மதிப்பீட்டு முகவர் மையங்கள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை தரமிறக்கியுள்ளதால் வெளிநாட்டு கடன்களைப் பெறுவதில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

டொலர் மூலமான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக சர்வதேச அளவில் கடன்களைப் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் இழந்துள்ளது.

இதன் விளைவாக ஏனைய நாடுகள் இலங்கையின் வளங்களை பேரம் பேசுகின்றன.வெளிநாட்டு இருப்புக்கள் சரிவு, எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதம்,சுற்றுலாத்துறை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலமான அந்நிய செலாவணி வருவாய் குறைதல் ஆகியவை கடன் நெருக்கடியை மோசமாக்கியுள்ளன என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்காக இலங்கை சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் அரச சொத்துக்களை விற்பனை செய்யப்போவதில்லை என்று அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழி மீறப்படுகிறது.

துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகாரசபையின் வருவாய் போதுமானதாக இல்லை என்று கூறியே இறங்குத்துறை விற்பனையை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் அதானிகுழுமத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை விற்பனை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

இந்தநிலையிவ் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த முன்வருமாறுஅனைத்து தேசபக்தி மக்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.