தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்க வேண்டுமென வேலுகுமார் நாடாளுமன்றில் பிரார்த்தனை

Report Print Kamel Kamel in அரசியல்
11Shares

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் புலமைச் சொத்து சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென்ற கரிசனை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக தென்படவில்லை எனவும், தொழில் அமைச்சரின் கூற்றுக்கள் சாதகமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்ளபம் குறித்த பேச்சுவார்த்தை தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.