மாகாண சபைத் தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை - அமைச்சர் டளஸ்

Report Print Steephen Steephen in அரசியல்
47Shares

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள பல முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இது தேர்தல் நடத்த வேண்டிய காலம் இல்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஆங்காங்கே பேசுகின்றனர். கொரோனா நிலைமையில் தேர்தலை நடத்த முடியாது என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.