இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளை ஜெய்சங்கர் நேற்றைய தினம் சந்தித்தார்.
இந்திய அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களுக்காகவும் சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காகவும் சஜித் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இ;ந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சஜித் பிரேமதாசவிற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.