இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் தமிழ் சமூகம் தொடர்பில் நேற்று கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நீடித்த அமைதி மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக இலங்கை உறுதியளித்ததைப் போன்று, அதிகாரப் பகிர்வு பொறிமுறையின் மூலம் இன மோதலை தீர்க்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது,
இலங்கையின் சொந்த நலனுக்காகவே தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதிக்கான எதிர்பார்ப்புகள் ஐக்கிய இலங்கைக்குள் இலங்கைக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இது இலங்கையில் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீது இந்திய அரசாங்கத்தின் அக்கறையை குறிக்கிறது என்று தமிழக ஆளுநர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் 13 ஆவது திருத்தம் குறித்து இந்திய நிலைப்பாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் தமிழக மக்களால் வரவேற்கப்படுவது உறுதி.
அத்துடன் அவரது அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் நலனுக்கான அயராத முயற்சிகளின் அர்ப்பணிப்பை காட்டுவதாகவும் தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.