அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று

Report Print Steephen Steephen in அரசியல்
123Shares

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக நாடாளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் மூன்றாவது கொரோனா தொற்றாளராக வாசுதேவ நாணயக்கார அடையாளம் காணப்பட்டுள்ளார்.