நாடாளுமன்றத்தை கூட்டுவதில் பிரச்சினையான நிலைமை

Report Print Steephen Steephen in அரசியல்
68Shares

கொரோனா தொற்றாளரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்துள்ள காரணத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தினங்களில் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கி செயற்பட்ட கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரள, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கிய இராசமாணிக்கம், பைசல் காசிம், எம்.எம்.ஹாரிஸ், எம்.எஸ்.தவ்பிக், நசீர் அஹமட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்தறையில் தங்கி இருந்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கொழும்பு திரும்ப உள்ளதுடன் நாடாளுமன்றத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட ரவூப் ஹக்கீம், உணவகத்தில் மாத்திரமின்றி, நாடாளுமன்ற அவையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.