கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது, அவரது நெருங்கிய இணைப்பாளர் என அடையாளம் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய சுய தனிமைப்படுத்திக்கொண்ட கயந்த கருணாதிலக்க உட்பட அவரது குடும்பத்தினருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த PCR பரிசோதனையில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க உட்பட அவரது குடும்பத்தினர் எவருக்கும் கொரோனா தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.