ஐ.நாவில் மனித உரிமை பேரவையில் நான் உரையாற்றிய போது சில சிங்கள பெண்களை அழைத்து வந்து என்னை மிரட்டியவர் தான் அமைச்சர் சரத் வீரசேகர என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை எங்கள் சிங்கள நாடு.இந்திய அரசுக்கு நாம் அடிவருடிகலல்ல.இந்தியாவிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மாகாண சபைகளுக்கு இனி இடமில்லையெனவும் சரத்வீர சேகர தெரிவித்துள்ளார்.இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டமைக்கு தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகம் தமிழ் நாட்டுத் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டமைக்கு இலங்கை சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் எமக்கு நன்றியை தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.