யாழ். பல்கலைக்கழகத்தில் மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி மீள் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் யாழ். பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களின் நெஞ்சில் வடுவாக உள்ளது. பலதரப்பட்டவர்களின் போராட்டத்திற்கு மத்தியிலும் தூபி மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கவேண்டும்.
இவ்விடயத்தில் இணைந்து உரிமைக்காக போராடிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.