ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்
218Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் அஜித் மன்னப்பேருமா நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டமையால் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க தனது நாடாளுமன்ற இடத்தை இழக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தேவையான வாக்குகளைப் பெறத் தவறிய அஜித் மன்னப்பெரும அந்த இடத்துக்கு நியமிக்கப்படுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.