கொவிட் நிலைமை மேம்படும்வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை!உதய கம்மன்பில

Report Print Ajith Ajith in அரசியல்
31Shares

ஆளும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் நாட்டின் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

நிலைமை மேம்பட்டதும் அரசாங்கம் இந்த விடயத்தை மறு ஆய்வு செய்து முடிவு செய்யும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நடத்த விரும்புவதாகவும், அது பழைய முறைப்படி நடத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மாகாண சபைகளும், உள்ளூராட்சி அமைச்சருமான ஜனக பண்டார தென்னகூனும், பழைய முறைப்படி மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவும் இன்று அறிவித்தது.

மாகாண சபைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.