நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டிருந்தது:நாமல் ராஜபக்ச

Report Print Kamel Kamel in அரசியல்
85Shares

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்த காரணத்தினால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றின் இன்றைய தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யவோ கருத்து வெளியிடவோ எம்மால் முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.