ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

Report Print Steephen Steephen in அரசியல்
20Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இன்றைய செயற்குழுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் மற்றும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக தீர்மானிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாமையானது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் இதற்கு தீர்வாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தலைமைத்துவம் இந்த வருடத்தில் இருந்து மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட உள்ளதுடன் அது சம்பந்தமாகவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.