மீண்டும் பொறுப்புகள் அற்ற சிரேஷ்ட அமைச்சர்கள் பதவிகளை உருவாக்குவது குறித்து கவனம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்ட எவ்வித பொறுப்புகளும் அற்ற சில சிரேஷ்ட அமைச்சர்கள் பதவிகளை உருவாக்குவது குறித்து அரசாங்கத்தின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிலருக்கு இந்த பொறுப்புகள் இல்லாத சிரேஷ்ட அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே ஆகியோருக்கு சிரேஷ்ட அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

19ஆவது திருத்தச் சட்டத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட்டிருந்ததுடன் அதனை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்க அரசாங்கத்தின் தலைவர்கள் முயற்சித்தனர்.

எனினும் அரசாங்கத்தில் உள்ள சிலர் இதனை கடுமையாக எதிர்த்ததன் காரணமாக அதனை செய்ய முடியவில்லை.

இதனால், அமைச்சு பதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் மாற்று நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சிரேஷ்ட அமைச்சு பதவிகள் சிலருக்கு வழங்கப்பட்டதுடன் அமைச்சர்களுக்கான அலுவலகத்திற்காக ஒரு கட்டடம் வழங்கப்பட்டது.

அதனை எதிர்க்கட்சிகள் முதியோர் இல்லம் என விமர்சித்திருந்தன.