ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்தக் கூற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையிலானது எனவும், பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் வகையிலான கருத்தாகவே இந்த உரையை கருதப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் இந்த கண்டனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.