நாடாளுமன்றில் பேச்சு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் எழுத்து மூலமான மகஜர் ஒன்றையும் எதிர்க்கட்சியினர் ஒப்படைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து குறித்து இந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட ரீதியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலைமைகளை தாம் அவதானித்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.