உதயங்க வீரதுங்க உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் வேலைத்திட்டத்தை அழித்து விட்டார் - நாமல் ராஜபக்சவின் மாமனார்

Report Print Steephen Steephen in அரசியல்
412Shares

உதயங்க வீரதுங்க உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான வேலைத்திட்டத்தை அழித்து விட்டதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளரும் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மாமனாருமான திலக் வீரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ள அவர், இந்த திட்டம் முழு உலகத்திற்கு மத்தியில் வெட்கமானது எனவும் இதனை கவனமாக அதனை செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வேலைத்திட்டத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை.அந்த சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவது எனது பேருந்துகளை அல்ல. அமைச்சர் நாமல் ராஜபக்ச எனது மருமகன் என்பதற்காக எனக்கு சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளர் பதவி வழங்கப்படவில்லை.

நாமல் ராஜபக்ச பிறப்பதற்கு முன்னரே நான் சுற்றுலா சம்பந்தமான தொழில் ஈடுபட்டு வருகிறேன். சுற்றுலா சபையின் தலைவரை நீக்கி விட்டு அந்த பதவிக்கு வரும் எதிர்பார்ப்பு எனக்கில்லை. நான் அமைச்சர் நாமல் ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்சவின் அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவதில்லை எனவும் திலக் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தான், ராஜபக்ச சகோதரர்களின் தாயாரது, தங்கையின் புதல்வர் என உதயங்க சமூக ஊடகம் ஒன்றிடம் கூறியிருந்தார். அத்துடன் உதயங்க வீரதுங்க சர்வதேச பொலிஸார் ஊடாக சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கின் சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.