ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம்! ரணில் எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Murali Murali in அரசியல்
109Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று முற்பகல் கூடிய நிலையில், கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டாரவும், உப தலைவராக அகில விராஜ் கரியவாசமும் நியமிக்கப்பட்டனர்.

ருவான் விஜேவர்தன தொடர்ந்து துணைத் தலைவராக செயல்படுவார். தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கட்சியின் சிரேஷ்ட துணை தவிசாளர்ளாக டி.எம். சுவாமிநாதன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.