கடன் செலுத்துவதற்கு அரசாங்கம் பணம் அச்சிடுகின்றது – ரில்வின் சில்வா

Report Print Kamel Kamel in அரசியல்
89Shares

கடன் செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிடுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கலேவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பெருந்தொகை கடனை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு பதினைந்து பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாகவும் இதில் 48 வீதம் வெளிநாட்டு கடன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிடுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.