2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலையாகும் ரஞ்சன்!

Report Print Rakesh in அரசியல்
592Shares

நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 8 மாதங்கள் மாத்திரமே தண்டனைக் காலமாக கருதப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடக செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் சிறைத் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 4 மாதங்களினாலும் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ரஞ்சன் ராமநாயக்க 2 வருடங்கள் 8 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறந்த நடத்தையுடன் செயற்படாத கைதிகளுக்கு இந்த சிறப்புரிமை வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.