ரஞ்சன் எம்.பிக்கு எதிரான இரண்டு வழக்குகளை மீளப் பெறுவதாக அமைச்சர் அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்
804Shares

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நுகேகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை மீள பெற அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான அனுதாபத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது என்று கூறிய அமைச்சர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலுக்கு தான் இலக்காகியிருந்தாலும், அதற்கு பதிலாக தான் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அண்மையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.