பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.
அதில் பொதுமன்னிப்புத் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமான சக்தியாக அமையும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.
இந்த பொதுமன்னிப்பின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமா? அரசியல் கைதிகளின் அவல வாழ்வுக்கு முடிவு தான் என்ன? போன்ற விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசாவுடன் இணைந்து அலசுகிறது ஐ.பி.சி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சி,