ஆறு மாத காலத்திற்கு இளைஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்க மொத்தம் ரூ .75 பில்லியன் தேவைப்படும்!சரத் பொன்சேகா

Report Print Ajith Ajith in அரசியல்
289Shares

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது நிதி ரீதியாக யதார்த்தமானது அல்ல என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு இளைஞருக்கு பயிற்சிகளுக்காக 750,000 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும் என்று முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் பொன்சேகா இதன்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆறு மாத காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குள் 100,000 இளைஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்க மொத்தம் ரூ .75 பில்லியன் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.