புத்த பெருமானை மதிக்கிறோம்! அவர் பெயரால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கிறோம் - சிவாஜிலிங்கம்...

Report Print Sujitha Sri in அரசியல்
98Shares

தொல்பொருள் திணைக்களம் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்களை முன்னெடுத்து வரும் சூழ்நிலையில் இப்போது அவர்களுக்கு புத்த பெருமானை நாம் மதிக்கின்ற போதும் அவரை வைத்துக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம் என கூறியுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடிய போது இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.