நாட்டின் சாதாரண மக்களை பற்றிய சிந்தனை அரசுக்கு கிடையாது : நளின் பண்டார

Report Print Gokulan Gokulan in அரசியல்
21Shares

நாட்டின் சாதாரண மக்களைப் பற்றிய சிந்தனை அரசுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற நிலை தான் காண்பிக்கிறது.

அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நுரைச்சோலை அனல் மின் நிலைய ஊழலில் ஈடுபட்டது போல் இன்றும் ஈடுபட ஏற்பாடுகளைச் செய்த வண்ணமுள்ளனர்.

கேள்வி மனுக்கள் கோராமல் நோபெல் என்ற நிறுவனத்திற்கு வழங்கி பாரிய கொள்ளையில் ஈடுபட்டதைப் போல் இன்றும் விலை மனுக்கள் கோராமல் அதே கொள்ளையைச் செய்த வண்ணமுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் தான் விலை மனுக்களைக் கோரினோம். வெளிப்படையாகச் செயற்பட்டோம்.

நீண்ட கால கிட்டிய கால விலை மனுக்களில் தான் நிலக்கரி பெறப்படுகிறது.சில காலங்களில் கடல் அலை, காற்று வீசும் திசை, குளிர் காலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ப தான் நாங்கள் செயற்பட்டோம். கொள்வனவு செய்தோம். ஆட்சிக்கு வந்து முதலில் 54 டொலருக்கு பெற்றனர். பிறகு 90 டொலர் என்று தடவையில் கூட்டி கொள்வனவு செய்துள்ளனர்.

அதிக கூடிய தொகையாக 69டொலருக்கு ஏனைய நாடுகள் நிலக்கரியைப் பெற்றுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் மாத்திரம் 90 டொலர்களுக்கு பெற்றுள்ளன. 2015 முன்னர் இருந்த நிலையைத் தான் மீள ஆரம்பிக்கின்றனர். பாரிய ஊழல் மாபியா இது.

மின்சார சபையும் இதனால் தான் வீழ்ச்சியடைகிறது. அண்மைய கணக்காய்வு அறிக்கை இதைத்தான் வெளிப்படுத்தியிருந்தது.நாட்டின் சாதாரண மக்களைப் பற்றிய சிந்தனை இவர்களிடம் இல்லை. சீனி 85 ரூபாவிற்கு நாட்டில் இருக்கிறதா? இந்த விலைக்குப் பெற்றவர்கள், நுகர்வோர்கள் இருக்கிறார்களா? என்று கேள்விக்குட்படுத்தினார்.

சீனியின் இறக்குமதி வரியை 50லிருந்து 25க்கு குறைத்தார்கள். இதனால் இறக்குமதி வரி வருமானத்தில் 11.4 பில்லியன் இழப்பு அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் ஏற்பட்டது.அரசாங்கத்திடம் நிதி இல்லை. 8 கெண்டர்களில் பணம் அச்சு அடித்துக் கொண்டு வந்ததாகக் கருத்தொன்று பேசப்படுகிறது.50 ரூபாவை மக்களுக்குக் கொடுத்திருக்கலாம் அல்லவா? வியாபாரிகளுக்குத் தான் இதனால் இலாபம். சீனி வரி மூலம் அதன் இலாபம் முன்னர் திறை சேரிக்குச் சென்றது. இன்று வேறு நபர்களுக்குச் செல்கிறது.

மக்கள் கஷ்டத்துடன் செலுத்தும் வரியை ஏன் நண்பர்களின் நலன்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள். அதன் இலாபங்களைத் திறை சேறிக்கேனும் எடுங்கள்.இந்தியாவில் சீனி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து அதற்கான சலுகைகளைச் செய்துள்ளது.

இலங்கை வியாபாரிகளும் அதில் ஈடுபட முனைந்துள்ளனர்.சீனி தொழில் செய்பவர்கள் மட்டுமல்லாமல் கொண்டு வருபவர்களும் இன்று சீனிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

69 இலட்சம் வாக்களித்த மக்களும் 50 வீதமான வாக்களிக்காத மக்களும் இன்று கஷ்டப்படுகின்றனர்.சிகரட் வியாபாரம் பற்றிப் பேச வேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தின் போது வரி அறவிடும் விடயங்கள் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அவ்வாறு இல்லை. இறுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.

இந்தப் பின்னணியில் தான் சிகரட் களஞ்சியப்படுத்த கடன் வழங்கியிருக்கின்றனர். அதுவும் மக்கள் வங்கி, இலங்கை வங்கிகள் வாங்கும் வட்டி வீதங்களுக்கும் குறைந்த வட்டி வீதத்தில் சிகரட் களஞ்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் சமூக பரவல் இல்லை அரசாங்கம் கூறுகிறது. என்றாலும் நாளுக்கு நாள் 1000பேர் வரை அடையாளம் காணப்படுகின்றனர்.கடந்த டிசம்பர் 120 பேராக இருந்து, தொற்று ஏற்படும் உலக நாடுகளின் சுட்டியில் முன்னோக்கி இருந்தோம்.93 ஆவது இடத்தில் இன்று உள்ளோம். அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. கொரோனா ஏற்பட்ட நாடான சீனா 83ஆவது இடத்தில் உள்ளது.

குளியாபிடிய வைத்தியசாலையில் 14பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் வைத்தியர்கள். எண்ணிக்கையை மறைக்கின்றனர். முதலாம் அலையின் போது 3 மாதம் நாடு முடக்கப்பட்டது, அதனால் என்ன பயன் விளைந்தது? பாடசாலைகளை ஆரம்பிக்க உள்ளனர். சரியான திட்டம் இல்லை.

கொவிட் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத்தை முன்னுதாரணமாகக் காட்டி இருக்கலாம். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வன்னமுள்ளது. சித்திரை புத்தாண்டிற்கு அரிசி விலை 200 ரூபாவிற்கு அதிகரித்து இருக்கும். இரண்டு நேரச் சாப்பாட்டிற்குக் கூட வருமானம் இல்லாத மக்கள் கிராமங்களிலும் நகர்ப் புறங்களிலும் உள்ளனர்.

இவர்கள்குறித்து கவனம் செலுத்துங்கள்.எதிர்க் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் இதற்கு உதவுவோம் என்று கூறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு 25 ஆம் திகதி கூடவுள்ளது. அதில் கட்சிக்கான சகல பதவி நிலை நியமனங்களையும் பூர்த்தி செய்வோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடப் பூர்த்தி விழாவை மார்ச் மாதம் நடத்தவுள்ளோம்.எமது புதிய கட்சி அதனது கட்டமைப்பைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகிறது. நாங்கள் வெற்றி பெறச் செய்வது எங்கள் தலைவரை அல்ல, எங்களை அல்ல, எங்கள் குடும்பத்தவர்களை அல்ல, எங்கள் ஆதரவு வியாபாரிகளை அல்ல, குடு விற்பனையாளர்களையல்ல.

நாட்டையும் சாதாரண சகல மக்களையும் வெற்றி பெறச் செய்வோம். நாங்கள் ஒருகுழு. குழு செயற்பாடு தான் எமது பலம். பொய் இல்லாத ஊழல் இல்லாத அரசியல்கட்சியாக இதை வளர்ப்போம். மக்கள் நலன் சார்ந்த யுகம் ஒன்றை உருவாக்குவது தான் எமது வேலைத் திட்டம். ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகப் பிக்குகள் நாட்டின் உன்மையான பிரச்சினைகளை அடையாளம் காணாமல் சாதாரண விடயங்களில் அதி கூடிய கவனங்களைச் செலுத்தியுள்ளனர்.

நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் என்பன சரியான நிலையிலில்லை. பொய், மாயை இனவாதங்களுக்குப் பின்னால் தான் இவர்கள் செல்கின்றனர். நாட்டின் இயற்கை வளங்கள், பூக்கோல அமைவிட பெறுமானத்தை அறியாமல் இருக்கின்றனர். பானம் குறித்து ஓர் ஊடகம் கூடுதலாகப் பிரச்சாரம் செய்கிறது.

நாளாந்த செய்திகளில் 2 நிமிடங்கள் பாணிக்கு ஒதுக்கி பிரச்சாரம் செய்கின்றனர். சபாநாயகர், அமைச்சர்கள் விளம்பரதாரர்களாக வந்து போகின்றனர் என்று கூறியதோடு, துறைமுக கிழக்கு முனையம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போது ஹம்பந்தோட்டை துறை முகத்திற்கு 800 டொலர் தேவைப்பட்டது. நல்லாட்சியில் நாங்கள் 300 டொலர் செலவழித்துத் தான் இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தோம்.இன்னும் 500 டொலர் தேவையுள்ளது.

நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை வெளிப்படையாக மேற்கொண்டோம். ஜப்பான் இந்தியாவோடு இனைந்து மேற்கொண்டோம். ஆனால் இவர்கள் இரகசியமாகக் கிழக்கு முனையத்தை விற்று விட்டார்கள்.

நாங்கள் வீதிக்கு வர முன்னர் இந்த ஆட்சியைக் கொண்டுவர முன்னின்ற பிக்குகளும், சிவில் சமூகங்களும் அவர் முன்னர் முன்னரே வீதிக்கு வந்து விட்டனர்.

நெலும் குலுனவிற்கு வருடாந்தம் 55 கோடி கடன் வழங்க வேண்டும். பெற்ற இலாபம்? மத்தள விமான நிலையம் அதன் இலாபம்? எங்கே என்று வினவினார்.

அதே போல் இன்றைய அரசாங்கத்தின் சட்டங்களை நாட்டின் பொதுச் சட்டமாக்க முயல்கின்றனர் அதற்கு இடமளிக்கக் கூட்டாது என்று தெரிவித்துள்ளார்.