பொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்பு தொகுதிக்கான மாநாடு

Report Print Rusath in அரசியல்
23Shares

பொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்கான மாநாடு இன்று பொரியபோரதீவு தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஸ, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித் தலைவி ச.காந்தரூபி, மற்றும் கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கலந்துகொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றியுள்ளார்.