கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை

Report Print Vethu Vethu in அரசியல்
95Shares

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சருக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எவரும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பைக் கல்வி அமைச்சர் மேற்கொண்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.

அத்தோடு பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.